இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கிளிநொச்சி விஜயம்

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கிளிநொச்சி விஜயம்

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கிளிநொச்சி விஜயம்

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2017 | 7:27 pm

இலங்கை மத்திய வங்கி ஆளுநர், கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்ற இருவேறு கலந்துரையாடல்களில் மத்திய வங்கியின் ஆளுநர் கலந்து கொண்டிருந்தார்.

இன்று காலை கிராம மட்ட அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

நுன் கடன் திட்டம் மூலம் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் இதன்போது மக்கள், மத்திய வங்கியின் ஆளுநருக்கு எடுத்துக்கூறியுள்ளனர்.

இதேவேளை, வட மாகாண நிதி நிறுவனங்களின் பிராந்திய முகாமையாளர்களை இன்று மதியம் சந்தித்த ஆளுநர், மக்களின் கருத்துகள் தொடர்பில் தெளிவூட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்