வட மேல் மாகாண தமிழ் பாடசாலைகளில் உயர்தர கணித, விஞ்ஞானப் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை

வட மேல் மாகாண தமிழ் பாடசாலைகளில் உயர்தர கணித, விஞ்ஞானப் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2017 | 8:27 pm

ஊவா மாகாண உயர்தர மாணவர்களுக்கான விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் நியூஸ்பெஸ்ட் கடந்த காலங்களில் செய்தி வௌியிட்டிருந்தது.

அதனைப் போன்றதொரு நெருக்கடியை வட மேல் மாகாண தமிழ் மாணவர்களும் பல வருடங்களாக எதிர்நோக்கியுள்ளனர்.

உயர் தரத்திற்கான விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் இன்மையால், வர்த்தகம் அல்லது கலைத்துறையில் உயர் கல்வியைத் தொடர வேண்டிய நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

வட மேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் சுமார் 36 தமிழ் பாடசாலைகள் உள்ளன.

எனினும், இந்த பாடசாலைகளில் விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளில் அதற்கான ஆசிரியர்கள் இல்லாத நிலைமை காணப்படுகிறது.

புத்தளம் மாவட்டத்தில் சுமார் 30 பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி வட மேல் மாகாண முதலமைச்சர் தர்மஶ்ரீ தசநாயக்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

ஆசிரியர் வெற்றிடங்களை ஓரளவேனும் நிரப்புவதற்கு, பட்டதாரி ஆசிரியர்களை இணைப்பதற்கான பரீட்சையொன்றை நடத்தியுள்ளதாகவும் அடுத்த வாரமளவில் நேர்முகத் தேர்வு நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்