லாஸ் வெகஸ் துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை

லாஸ் வெகஸ் துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை

லாஸ் வெகஸ் துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2017 | 7:42 am

அமெரிக்காவின் லாஸ் வெகஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தி குறைந்தது 58 பேரைக் கொன்று, 515 இற்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்குக் காரணமான சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அமெரிக்காவின் லாஸ் வெகஸில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் 64 வயதான ஸ்டீஃபன் பேடக், என்பவரே சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியுள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண்டலே வளைகுடா ஹோட்டலின் 32 வது மாடியில் உள்ள அறையில் இருந்து இந்தச் சந்தேகத்திற்குரிய துப்பாக்கித்தாரி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் அவரை நெருங்கும் போது, பேடக் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நவீன வரலாற்றில், இது ஒரு மிகவும் பாரதூரமான துப்பாக்கிச் சூட்டு சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விடுதியில் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உலகையே அதிரவைத்த லாஸ் வெகஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புகள் எதுவும் இல்லை என அமெரிக்க புலனாய்வு அமைப்பு செய்தி வௌியிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி இது மிகவும் பயங்கரமானதொரு துப்பாக்கிப்பிரயோகம் என தெரிவித்துள்ளதுடன் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ஜனாதிபதி சென்று பார்வையிட்டுள்ளமை குறிபபிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்