பாராளுமன்ற ஜனநாயகம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தி:  இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்ற ஜனநாயகம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தி:  இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்ற ஜனநாயகம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தி:  இன்று விசேட பாராளுமன்ற அமர்வு

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2017 | 7:05 am

பாராளுமன்ற ஜனநாயகம் உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சார்க் நாடுகளின் சபாநாயகர்களின் பங்கேற்புடன் விசேட அமர்வு இடம்பெறவுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் நாட்டின் அபிவிருத்திக்காகவும் சமூகத்தின் சுபீட்சத்திற்காகவும் பாராளுமன்றம் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சபாநாயகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றி கொள்ள பாராளுமன்றம் உறுதி பூண்டுள்ளதாகவம் சபாநாயகர் தெரிவித்தார்.

பாராளுமன்றம் 1947 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி முதற் தடவையாக கூடியது.

அரசு பேரவையின் சபாநாயக்கராக பணியாற்றிய சேர் பிரான்ஸிஸ் மொலமுரே இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்