நிஸ்ஸங்க சேனாதிபதி, பாலித்த பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நிஸ்ஸங்க சேனாதிபதி, பாலித்த பெர்ணான்டோவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2017 | 12:42 pm

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ மற்றும் அவன்ற் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காலி கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த அவன்ற்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு அவன்ற் கார்ட் மெரிடைம் சர்விசஸ் நிறுவனத்திற்கு வாய்ப்பு வழங்குவதற்காக 355 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியமை மற்றும் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 47 குற்றப்பத்திரிகையின் கீழ் சட்டமா அதிபரால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரரப்பிணையிலும் பிரதிவாதிகள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளுக்கு முன்னர், பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரத்னபிரிய குருசிங்க உத்தரவிட்டுள்ளார்.

பிரதிவாதிகளின் வௌிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு 20 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கின் சாட்சி விசாரணைகள் அடுத்த வருடம் மார்ச் மாதம் 19,20 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்