தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதம்

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதம்

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2017 | 9:36 pm

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் கடந்த 8 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் மூன்று கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

எனினும், அவர்களின் உடல் நிலையில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என அவர் கூறினார்.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தமது வழக்குகளை அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் கோரிக்கை தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்