பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

02 Oct, 2017 | 6:55 am

பாடசாலை மாணவர்கள் 45 இலட்சம் பேருக்கு காப்புறுதி பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இதன் மூலம் 2 இலட்சத்திற்கு காப்புறுதி செய்வதன் மூலம் 5 இலட்சதத்திற்கான பயனை பெற்றுக் கொள்ள முடியும் .

5 வயது தொடக்கம் 19 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் இந்த காப்புறுதி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்