துருவ் விக்ரமின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வௌியிட்டார் விக்ரம்

துருவ் விக்ரமின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வௌியிட்டார் விக்ரம்

துருவ் விக்ரமின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வௌியிட்டார் விக்ரம்

எழுத்தாளர் Staff Writer

02 Oct, 2017 | 11:21 am

விக்ரமின் மகன் துருவ் விக்ரம் விரைவில் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அறிமுகமாகும் படம் குறித்த அறிவிப்பை விக்ரம் நேற்று வெளியிட்டிருந்தார்.

தனது கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விக்ரம்.

அவரது மகனான துருவ் விக்ரம் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் படித்து வருகிறார்.

அவரது படிப்பை முடித்த பிறகு விரைவில் படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்தன.

அதற்கேற்றாற் போல் துருவ்வும் அவரது டப்ஸ்மேஷ் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பிரபலமாகி வந்தார்.

இந்நிலையில், துருவ்வின் சினிமா அறிமுகம் குறித்த அறிவிப்பை விக்ரம் அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் விக்ரம் கூறியிருப்பதாவது, சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் நடிக்க இருப்பதாக விக்ரம் அறிவித்துள்ளார்.

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்க இருக்கிறது, இதுகுறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்