கல்குடாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

கல்குடாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்: வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Oct, 2017 | 6:35 pm

மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்குதலுக்கு இலக்கானமை தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கு நீதவான் வழக்கை ஒத்திவைத்தார்.

கல்குடா பகுதியில் நிர்மாணிக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற நியூஸ்பெஸ்ட்டின் ஊடகவியலாளர் நல்லதம்பி நித்தியானந்தன் மற்றும் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிதரன் ஆகியோர் மீது கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்