வவுனியா, மன்னாரில் புதிய வகையான மலேரியா நுளம்புகள் கண்டுபிடிப்பு

வவுனியா, மன்னாரில் புதிய வகையான மலேரியா நுளம்புகள் கண்டுபிடிப்பு

வவுனியா, மன்னாரில் புதிய வகையான மலேரியா நுளம்புகள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2017 | 3:00 pm

வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் புதிய வகையான மலேரியா நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மன்னார், வவுனியா பகுதிகளிலுள்ள பஸ் நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் புகை விசிறும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மலேரியா ஒழிப்புப் பிரிவு தீர்மானித்துள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக வவுனியாவின் பிராந்திய மலேரிய தடுப்புப் பிரிவின் அதிகாரி டொக்டர் சுதேசபவன் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வவுனியா பஸ் நிலையத்திற்கு அருகிலிருந்த கிணற்றிலிருந்து மலேரியா நுளம்பு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, மலேரியா ஒழிப்புப் பிரிவினர் அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக மலேரியா ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில் மலேரியா காய்ச்சலால் 38 போர் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்