இன்று ஆரம்பிக்கப்படவிருந்த ஹம்பாந்தோட்டை துறைமுக செயற்திட்ட நடவடிக்கையில் தாமதம்

இன்று ஆரம்பிக்கப்படவிருந்த ஹம்பாந்தோட்டை துறைமுக செயற்திட்ட நடவடிக்கையில் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2017 | 8:47 pm

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் ஈ ஷியேங்க் லியெங்க் வை மேற்கோள் காட்டி த ஹைலண்ட் பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துடன் தொடர்புடைய கால வரையரையுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதிலும், அதனுடன் தொடர்புடைய ஏனைய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படாமையால் திட்டத்தின் அடுத்தக்கட்ட செய்பாடுகளை ஆரம்பிக்க முடியாதுள்ளதாக த ஹைலண்ட் பத்திரிகையின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த செயற்றிட்டத்தின் அபிவிருத்திப் பணிகளில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லை என இலங்கைக்கான சீன தூதுவர் ஹைலண்ட் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை மற்றும் சீனாவின் Merchant Port Holdings நிறுவனம் என்பனவற்றிற்கு இடையில் கடந்த ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஒப்ந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 69 .55 வீதம் சீன நிறுவனத்திற்கும், 30.45 வீதம் இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபைக்கும் உரித்துடையதாகும்.

99 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில் 70 வருடங்களின் பின்னர் துறைமுகங்கள் அதிகார சபை அனைத்து பங்குககளையும் கொள்வனவு செய்தல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்