15 நாட்களுக்கு பூமி இருளடையவுள்ளதா?

15 நாட்களுக்கு பூமி இருளடையவுள்ளதா?

15 நாட்களுக்கு பூமி இருளடையவுள்ளதா?

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2017 | 11:41 am

15 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் என வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை புவியில் இருள் சூழவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் இருள் சூழவுள்ளதாக நாசா அறிவித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின்றன.

எவ்வாறாயினும் இவ்வாறான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பேராசிரியர் சந்தன ஜயரத்ன நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இவ்வாறான தகவல்கள் இதற்கு முன்னரும் வௌியாகியதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்