வேணாவில் பகுதியில் வருடாந்த மின் கட்டணம் அறவிடப்படுவதாக மக்கள் விசனம்

வேணாவில் பகுதியில் வருடாந்த மின் கட்டணம் அறவிடப்படுவதாக மக்கள் விசனம்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2017 | 8:38 pm

இலங்கை மின்சார சபையால் நாடாளவிய ரீதியில் மாதாந்தம் மின்கட்டணம் அறவிடப்படுவது வழமை, எனினும் முல்லைத்தீவு – வேணாவில் பகுதியில் வருடாந்த மின் கட்டணம் அறிவிடப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு – வேணாவில் பகுதியில் வருடாந்த மின்சார கட்டணம் அறவிடப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்திற்குட்பட்ட வேணாவில் பகுதி மக்களுக்கு 2014 ஆம் ஆண்டு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.

மின் இணைப்பு வழங்கப்பட்டதிலிருந்து மின் கட்டணத்தினை செலுத்துவதற்கு மாதாந்த மின்சார பட்டியல் இலங்கை மின்சார சபையால் வழங்கப்படவில்லை.

மாறாக வருடாந்த கட்டணம் உள்ளடக்கப்பட்ட மின் பட்டியல் தற்போது வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்த்தனவிடம் நாம் வினவினோம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்சார சபை ஊழியர் பற்றாக்குறை காணப்படுவதால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகவும் ஊடகப்பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்த்தன குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்