வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2017 | 11:36 am

புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த லொறியுடன் சைக்கிளொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 11.20 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் புத்தளம் பகுதியை சேர்ந்த 55 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்