வடமாகாணத்தில் தற்கொலை அதிகரிப்பிற்கு நுண்கடனும் ஒரு காரணம் – உளநல மருத்துவர்கள் கருத்து

வடமாகாணத்தில் தற்கொலை அதிகரிப்பிற்கு நுண்கடனும் ஒரு காரணம் – உளநல மருத்துவர்கள் கருத்து

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2017 | 7:48 pm

வடமாகாணத்தில் தற்கொலை அதிகரிப்பிற்கு நுண்கடன்களும் ஒரு காரணியாக அமைவதாக உளநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டமும் யுத்தத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிய மூன்று தசாப்த யுத்தத்தினால் சொந்த நிலத்தினை விடுத்து, உடமைகளை இழந்து ஏதிலிகளாக அகதி முகாம்களில் குடியேறினர் மக்கள்.

மீண்டும் சொந்த நிலத்தில் குடியேறிய மக்களுக்கு, வாழ்வில் முன்னேறுவதற்கான பொருளாதார வழிமுறைகள் எதுவும் இருக்கவில்லை.

வங்கிகளில் கடன் வழங்கும் நடைமுறைகள் கடினமாக இருந்தமையால், இலகுவில் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு வடக்கில் தவிர்க்க முடியதாயிற்று.

நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மிக சூட்சுமமாக மக்களுக்கு கடன்களை வழங்கி அதிக வட்டியினை அறவிட்டனர்.

சதாரண வட்டி வீதத்தினை விட அதிக வட்டிகளையே மக்களிடமிருந்து அறவிட்டனர்.

12 வீதம் முதல் 25 வீதம் வரையான வட்டிவீதத்தில் நுண்கடன்களை வழங்கி மக்களின் வருமானங்களை சுரண்டுகின்ற செயற்பாட்டில் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

வடமாகாணத்தில் தற்கொலை அதிகரிப்பிற்கு கடன்களும் ஒரு காரணியாக அமைவதாக உளநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்