யாழ். போதனா வைத்தியசாலையில் ஆளணிப் பற்றாக்குறை: அசௌகரியத்திற்கு மத்தியில் நோயாளர்கள்

யாழ். போதனா வைத்தியசாலையில் ஆளணிப் பற்றாக்குறை: அசௌகரியத்திற்கு மத்தியில் நோயாளர்கள்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2017 | 8:02 pm

யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவிவரும் ஆளணிப்பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு வடமாகாணத்திலிருந்து நாளாந்தம் அதிகளவான நோயாளர்கள் வருகை தருகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறை காரணமாக நோயளர்கள் உரியமுறையில் சிகிச்சை பொற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் 60 வைத்தியர் வெற்றிடங்கள் மற்றும் 200 தாதியர் வெற்றிடங்கள் தற்போது காணப்படுவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எதாவது மேற்கொள்ளப்பட்டுள்ளாதா? என்பது தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் நாம் வினவினோம்.

அமைச்சுடன் கலந்துரையாடி இது தொடர்பில் ஆராய்வதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.


இதேவேளை கிளிநொச்சி – கௌதாரிமுனையிலுள்ள ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்திற்கு வைத்தியர் இன்மையால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டு மக்களின் உரிமைகளில் ஒன்றாக இலவச சுகாதாரத்துறை காணப்படுகின்ற போதிலும், அதன் பயன்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் சமனாக கிடைக்கின்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனினும் நகர்ப்புறங்களிலுள்ள மக்களுக்கும் கிடைக்கும் சுகாதார வசதிகள், கிராமப்புறங்களில் இருக்கும் மக்களும் கிடைப்பதில்லை.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கௌதாரிமுனை ஆரம்ப சுகாதார நியைலத்திற்கு, மாதத்தில் ஒரு முறை மாத்திரம் வைத்தியர் வருகை தருவதாக மக்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக பூநகரி பிரதேச செயலாகத்திற்குட்பட்ட வெட்டுக்காடு,கௌதாரிமுனை,விநாசியோடை, விணாசித்தலை,பனம்வெட்டித்தோட்டம், மற்றும் கல்முனை பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பகுதி மக்கள் வைத்தியதேவைகளை பெற்றுக் கொள்வதற்காக, பூநகரி ஆதார வைத்தியசாலை அல்லது யாழ். மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி மருத்துமனைக்கு செல்லவேண்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்