சிறுவர்களுக்கு மிருகக்காட்சி சாலைகளை இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம்

சிறுவர்களுக்கு மிருகக்காட்சி சாலைகளை இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம்

சிறுவர்களுக்கு மிருகக்காட்சி சாலைகளை இலவசமாக பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2017 | 11:46 am

நாளைய தினம் மிருகக்காட்சி சாலைகளை இலவசமாக பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் சிறுவர்களுக்கு கிட்டியுள்ளது.

சிறுவர் தினத்தை முன்னிட்டு இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிகா மல்சிங்க தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் , பின்னவல மிருகக்காட்சிசாலை ஆகியவற்றை பார்வையிடுவதற்கு சிறுவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது.

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளதுடன், 12 வயதிற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை சீருடையில் சமூகமளிக்குமாறும் தேசிய வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்