மத்திய அதிவேக வீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து குருனாகல் மக்கள் ஆரம்பித்த போராட்டம் கைவிடப்பட்டது

மத்திய அதிவேக வீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து குருனாகல் மக்கள் ஆரம்பித்த போராட்டம் கைவிடப்பட்டது

மத்திய அதிவேக வீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து குருனாகல் மக்கள் ஆரம்பித்த போராட்டம் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2017 | 8:20 pm

மத்திய அதிவேக வீதியின் இரண்டாவது கட்டத்தின் நிர்மாணப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து குருனாகல் ஹேனமுல்ல பகுதி மக்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று கைவிடப்பட்டது.

பொலிஸாரினால் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவிற்கமைய இந்த போராட்டம் கைவிடப்பட்டது.

உரிய மதிப்பீடுகளின் அடிப்படையில் நட்டஈடு வழங்கப்படவில்லை மற்றும் வீதி நிர்மாணப்பணிகள் காரணமாக வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மக்கள் கடந்த 27 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தினைஆரம்பித்திருந்தனர்.

அதிவேக வீதியின் ஹேனமுல்ல பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இன்று முற்பகல் நீதிமன்ற உத்தரவுடன் வருகைதந்த குருனாகல் பொலிஸார், வீதியை திறக்குமாறு ஆர்ப்பாட்டக்கார்களுக்கு கூறினர்.

நீதிமன்ற உத்தரவிற்கமைய மக்கள் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டனர்.

அதனையடுத்து, பொலிஸார் மற்றும் அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகளை முன்னெடுக்கும் குறித்த நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து வீதியின் நுழைவாயிலை மீண்டும் திறந்தனர்.

நான்கு நாட்களின் பின்னர் வீதி திறக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்