பெட்ரோல், டீசல் விலை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2017 | 5:47 pm

பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

எனினும், விலை அதிகரிப்பு வீதத்தை இதுவரை தீர்மானிக்கவில்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் உப தலைவர் சித்தார்த் ஆக்ரவால் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களில் எரிபொருளின் விலை குறைவடைந்திருந்த நிலையில், தற்போதி தீர்வை வரி அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பெற்றோல் மற்றும் டீசலை நட்டத்திலேயே விநியோகிப்பதாகவும், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் பெற்றோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிப்பதை தவிர வேறு மாற்றுவழிகள் இல்லையென லங்கா ஐ ஓ நிறுவனத்தின் உப தலைவர் சித்தார்த் ஆக்ரவால் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்