இளையோர் தேசிய சட்ட மாநாடு காலியில் ஆரம்பம்

இளையோர் தேசிய சட்ட மாநாடு காலியில் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2017 | 8:52 pm

இளையோர் தேசிய சட்ட மாநாடு 2017 நேற்று காலியில் ஆரம்பமாகியது.

இந்த வாரம் முழுவதும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 300 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் பிரதம நீதியரசர் பிரியசத் டெப் நீதி அமைச்சர் தலதா அத்துக் கோரள உட்பட மேலும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Tung Lai Margue இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் , சட்ட மா அதிபர் , உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் மற்றும் இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வின் பிரதான உரையை வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் ஆற்றினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்