எல்பிட்டியவில் முன்பள்ளி சிறுவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி டிப்பருடன் மோதியது

எல்பிட்டியவில் முன்பள்ளி சிறுவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி டிப்பருடன் மோதியது

எல்பிட்டியவில் முன்பள்ளி சிறுவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி டிப்பருடன் மோதியது

எழுத்தாளர் Bella Dalima

29 Sep, 2017 | 3:48 pm

எல்பிட்டிய – அவித்தாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

டிப்பர் வண்டி ஒன்றுடன் முன்பள்ளி சிறுவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 10 சிறுவர்கள் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் நான்கு சிறுவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்