பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

29 Sep, 2017 | 3:23 pm

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க பயணித்த காருடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை நோக்கி பயணித்த கார், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி இன்று அதிகாலை விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் சென்றவர் பலத்த காயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்கவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்