இசையுலகில் 25 ஆண்டுகள்: தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்

இசையுலகில் 25 ஆண்டுகள்: தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்

இசையுலகில் 25 ஆண்டுகள்: தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்

எழுத்தாளர் Bella Dalima

29 Sep, 2017 | 4:59 pm

ரோஜா படத்தில் இசையமைத்து 25 ஆண்டுகள் கடந்த நிலையில் டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.

1992 ஆம் ஆண்டில் இவர் முதன்முதலாக இசையமைத்த ரோஜா திரைப்படம் வெளியாகியது. தற்போது 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இசையுலகில் தனது வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடும் நோக்கில் இந்தியாவில் ’என்க்கோர்’ என்ற இசை சுற்றுப்பயணத்தின் மூலம் சில இசை நிகழ்ச்சிகளை ஏ.ஆர். ரஹ்மான் நடத்தவுள்ளார்.

அதன் முதற்கட்டமாக, எதிர்வரும் 26 ஆம் திகதி ஐதராபாத் நகரிலும், டிசம்பர் 3 ஆம் திகதி அகமதாபாத் நகரிலும், டிசம்பர் 17 ஆம் திகதி மும்பையிலும், டிசம்பர் 23 ஆம் திகதி டெல்லியிலும் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.

நாடு முழுவதிலும் இருந்து இசைக்கலைஞர்களும் பாடகர்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்