வசீம் தாஜுடீன் கொலை: மேலும் சிலர் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு

வசீம் தாஜுடீன் கொலை: மேலும் சிலர் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக நீதிமன்றில் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Sep, 2017 | 8:16 pm

ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலை இடம்பெற்ற தினம், ஜனாதிபதி செயலகத்திலிருந்து நாராஹென்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிலருக்கு தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளமை தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ஜெயராம் டொக்ஸி முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்புகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் நிமித்தம், மேலும் சிலர் இந்த குற்றச்செயலுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேலதிக நீதவான் ஜெயராம் டொக்ஸி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்