மெக்சிகோவில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Sep, 2017 | 4:53 pm

மெக்சிகோவில் செயற்பட்டு வந்த போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

சின்ஹுவாஹா நகரில் உள்ள குறித்த நிலையத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன்போது 8 பேர் காயமடைந்துள்ளனர்.

அஜிடிகாஸ் என்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குழுவினருக்கும் லாஸ் மெக்சிகல்ஸ் என்ற மற்றொரு பிரிவினருக்கும் இடையில் இருந்து வரும் போதைப்பொருள் விற்பனைப் போட்டி காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டில் 23,000 பேர் வரையில் அங்கு இதுபோன்ற போதைப்பொருள் தொடர்பான வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்