பிளேபாய் இதழின் நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார்

பிளேபாய் இதழின் நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார்

பிளேபாய் இதழின் நிறுவனர் ஹக் ஹெப்னர் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

28 Sep, 2017 | 5:13 pm

பிளேபாய் இதழின் நிறுவனர் ஹக் ஹெப்னர் தமது 91 ஆவது வயதில் நேற்றிரவு (27) காலமானார்.

பிளேபாய் இதழை 1953 ஆம் ஆண்டு ஹக் ஹெப்னர் ஆரம்பித்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1926 ஆம் ஆண்டு பிறந்த ஹக் ஹெப்னர், பிளேபாய் இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றியுள்ளதுடன், தொழிலதிபராகவும் திகழ்ந்துள்ளார்.

பிளேபாய் இதழுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த இதழின் அட்டையில், சினிமா, மாடலிங் மற்றும் பாப் பாடகிகளின் கவர்ச்சிப் படங்கள் இடம்பெறுவது வழக்கம்.

இதழின் அட்டையில் தங்கள் படம் இடம்பெறுவதை பிரபலங்கள் பலரும் கெளரவமாகக் கருதுகின்றனர்.

உலகில் ஆண்களால் வாங்கப்படும் அதிகமான இதழ் என்ற சாதனையை இவ்விதழ் படைத்துள்ளது.

தற்போது இணையத்தள வளர்ச்சியால் மாதம் 8 இலட்சம் பிரதிகள் மட்டுமே விற்பனையாகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்