பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கை 4 விக்கெட்களை இழந்தது

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கை 4 விக்கெட்களை இழந்தது

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இலங்கை 4 விக்கெட்களை இழந்தது

எழுத்தாளர் Bella Dalima

28 Sep, 2017 | 10:33 pm

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் இன்று ஆரம்பமானது.

முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களை ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

அபுதாபி ஷெய்க் ஷாஹிட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 61 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளையும் இழந்தது.

லஹிரு திரிமான்னவை ஆட்டமிழக்கச் செய்த யசீர் ஷா தனது 150 ஆவது டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

மத்திய வரிசையில் திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஜோடி நான்காம் விக்கெட்டுக்காக 100 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

திமுத் கருணாரத்ன தனது 13 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார்.

205 பந்துகளில் 93 ஓட்டங்களைப் பெற்ற அவர் ரன் அவுட் ஆனார்.

தனது 13 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தை எட்டிய தினேஷ் சந்திமால், 60 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 42 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்