நாட்டு மக்கள் வட கொரியா செல்வதற்கு மலேசியா தடையுத்தரவு

நாட்டு மக்கள் வட கொரியா செல்வதற்கு மலேசியா தடையுத்தரவு

நாட்டு மக்கள் வட கொரியா செல்வதற்கு மலேசியா தடையுத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

28 Sep, 2017 | 4:34 pm

தமது நாட்டு மக்கள் வட கொரியா செல்வதற்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது.

ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டு வரும் வட கொரியாவுக்கு தூதரக ரீதியாக அழுத்தம் கொடுக்கும் வகையில், மலேசியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான அடுத்த அறிவிப்பு வௌியாகும் வரை இந்த உத்தரவு நீடிக்கும் என மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வௌியிட்டுள்ளது.

மலேசிய அரசின் இந்த தடையுத்தரவு, எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி போயாங்யாங் நகரில் நடைபெறும் வடகொரியா – மலேசியா இடையேயான கால்பந்துப் போட்டிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

ஏற்கனவே, இருநாடுகளுக்கும் இடையேயான கால்பந்து போட்டி இரு முறை பாதுகாப்பு காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளின் எதிர்ப்பு, ஐ.நா-வின் பொருளாதாரத் தடைகளை மீறி வட கொரியா அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது.

இதனால், குவைத், மெக்ஸிகோ ஆகிய நாடுகள் தங்கள் தூதர்களை திரும்ப அழைத்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்