தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளைக் கொண்டு செல்ல 43 இந்திய மீனவர்கள் இலங்கை வருகை

தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளைக் கொண்டு செல்ல 43 இந்திய மீனவர்கள் இலங்கை வருகை

தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளைக் கொண்டு செல்ல 43 இந்திய மீனவர்கள் இலங்கை வருகை

எழுத்தாளர் Bella Dalima

28 Sep, 2017 | 3:05 pm

நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளைக் கொண்டு செல்வதற்காக 43 இந்திய மீனவர்கள் வருகை தந்துள்ளனர்.

7 படகுகள் மூலம் இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பை வந்தடைந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் லங்காநாத திஸாநாயக்க தெரிவித்தார்.

கடற்படையினரின் உதவியுடன் 43 இந்திய மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருந்து, தமது படகுகளை பழுத்துபார்த்த பின்னர் அவர்களது நாட்டிற்குக் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளில் 7 படகுகள் தமிழகத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்