இன்று நள்ளிரவு முதல் அரிசி, நெத்தலிக் கருவாட்டின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அரிசி, நெத்தலிக் கருவாட்டின் விலை குறைப்பு

எழுத்தாளர் Bella Dalima

28 Sep, 2017 | 3:59 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எட்டு அரிசி வகைகளுக்கும் நெத்தலிக் கருவாட்டிற்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் ரி.எம்.கே.பி. தென்னகோன் தெரிவித்தார்.

அதற்கமைய, வௌ்ளை நாட்டரிசி 77 ரூபாவிருந்து 74 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வௌ்ளை அரிசி 68 ரூபாவிருந்து 65 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சம்பா 89 ரூபாவிருந்து 84 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சிவப்பரிசி 77 ரூபாவிலிருந்து 75 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

83 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சிவப்பு நாட்டரிசி 80 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சதொச தலைவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, வௌ்ளை சம்பா 94 ரூபாவிலிருந்து 90 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

சிவப்பு சம்பா 90 ரூபாவிலிருந்து 88 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட இறக்குமதி செய்யபடும் அரிசி இன்று நள்ளிரவு முதல் 60 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதேவேளை, தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் நெத்தலி ஒரு கிலோகிராம் 539 ரூபாவிலிருந்து 525 ரூபா வரை விலை குறைக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்