வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்புகள் தற்போது அறிவிக்கப்படுகின்றன

வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்புகள் தற்போது அறிவிக்கப்படுகின்றன

வித்தியா படுகொலை வழக்கின் தீர்ப்புகள் தற்போது அறிவிக்கப்படுகின்றன

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2017 | 12:46 pm

ேபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தற்போது தீர்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன.

யாழ் மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் ட்ரயல் அட்பார் தீர்பாயத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இறுதித் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய தீர்ப்பாயத்தின் தலைவரான மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தற்போது தீர்ப்புகளை அறிவிக்கின்றார்.

வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாருக்கு எதிரான அனைத்து சாட்சிகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ட்ரயல் அட்பார் மன்றின் தலைவர் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அறிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ் சட்ட வைத்திய அதிகாரியான உருத்திரபசுபதி மயூரதனால் வழங்கப்பட்ட அனைத்து சாட்சியங்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரபணு இரசாய பகுப்பாய்வு இந்த வழக்கில் முக்கியவம் வாய்ந்ததாக இல்லை எனவும் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாப்பிள்ளை எனப்படும் நடராசா குகநேசனின் , சுரேஸ்கரன் மற்றும் தனுராம் ஆகியோரால் மன்றுக்கு வழங்கப்பட்ட சாட்சியங்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டமையை காணொளியாக பதிவு செய்யப்பட்டுள்ளமையை மன்று ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் ட்ரயல் அட்பார் மன்றின் தலைவரான நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அறிவித்துள்ளார்.

இதேவேளை வழக்கின் சாட்சியாளரான மென்பொருள் பொறியியளலாளர் மொஹமட் ஹிப்லானின் சாட்சியங்கள் அனைத்தையும் மன்றினால் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமாரிற்கு எதிராக எவ்வித சாட்சியங்களும் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

02, 03, 04, 05 ,06 ,08 மற்றும் 09 ஆம் இலக்க எதிரிகளுக்கு எதிரான அனைத்து சாட்சிகளும் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அறிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.

நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனினால் அறிவிக்கப்படும் அனைத்து தீர்ப்புகளுக்கும் தான் இணக்கம் தெரிவிப்பதாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அறிவித்துள்ளார்.

02, 03, 05 மற்றும் 06 இலக்க எதிரிகள் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி மற்றும் திட்டமிட்ட கொலை என்பனவற்றுடன் நேரடி தொடர்புப்பட்டவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதாக நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரயல் அட்பார் மன்றின் தலைவர் நீதிபதி சசி மகேந்திரன் தனது 312 பக்க தீர்ப்புகளை அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தனது 345 பக்க தீர்ப்புகளை அறிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்