வித்தியா கொலை குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை

வித்தியா கொலை குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை

வித்தியா கொலை குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2017 | 1:00 pm

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்றத்தில் கூடியுள்ள ட்ரயல் அட்பார் விசாரணை மன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ,

02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார்

03 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார்

04 ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன்

05 ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன்

6 அம் இலக்க எதிரியான பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன்

08 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன்

09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்