மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஸ்டொக்ஸ், ஹேல்ஸூக்கு இடமில்லை: இங்கிலாந்து அதிரடி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஸ்டொக்ஸ், ஹேல்ஸூக்கு இடமில்லை: இங்கிலாந்து அதிரடி

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஸ்டொக்ஸ், ஹேல்ஸூக்கு இடமில்லை: இங்கிலாந்து அதிரடி

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2017 | 5:04 pm

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் பென் ஸ்டொக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோருக்கு இடமில்லை என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட், ஒரு T20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்டில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும், T20 இல் மேற்கிந்தியத் தீவுகளும் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை நடந்த 3 ஒருநாள் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இதற்கிடையே, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், பிரிஸ்டலில் உள்ள இரவு விடுதியொன்றில் ஒருவரை தாக்கிக் காயப்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அவருடன் மற்றொரு வீரரான அலெக்ஸ் ஹேல்ஸும் இருந்துள்ளார்.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் ஸ்டொக்ஸ் மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான அணி இன்று அறிவிக்கப்பட்டது. 16 பேர் கொண்ட அணியில் பென் ஸ்டொக்ஸ் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்