மத்திய அதிவேக வீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அதிவேக வீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2017 | 8:04 pm

மத்திய அதிவேக வீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தம்பொக்கையில் இருந்து கெட்டுவான வரையான பகுதியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள வீதியில் நேற்று (26) இரவு முதல் மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

8.5 கிலோமீட்டர் அளவான குறித்த பகுதியை கம்பங்கள் மூலம் மேல் நோக்கி அமைப்பதாகக் கூறினாலும், தரை மார்க்கமாகவே வீதி அமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பகுதி மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டத்திற்கு சொந்தமானதாகும்.

மக்களின் எதிர்ப்பு காரணமாக செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்