சிலாவத்துறையில் குழந்தை உயிரிழப்பு: தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் கைது

சிலாவத்துறையில் குழந்தை உயிரிழப்பு: தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் கைது

சிலாவத்துறையில் குழந்தை உயிரிழப்பு: தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபர் கைது

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2017 | 6:54 pm

மன்னார் – சிலாவத்துறை, பொற்கேணி பகுதியில் குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையைத் தாக்கி, கொலை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் தாயுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

ஒரு வயதும் 9 மாதங்களும் நிரம்பிய குழந்தையொன்றின் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய, குழந்தையின் சடலம் இன்று தோண்டியெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்