சிலாவத்துறையில் ஒரு வயது குழந்தை தாக்கப்பட்டு கொலை: சந்தேகநபர் கைது

சிலாவத்துறையில் ஒரு வயது குழந்தை தாக்கப்பட்டு கொலை: சந்தேகநபர் கைது

சிலாவத்துறையில் ஒரு வயது குழந்தை தாக்கப்பட்டு கொலை: சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2017 | 11:35 am

மன்னார் சிலாவத்துறை பகுதியில் குழந்தையொன்றை தாக்கி கொலை செய்தமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையின் தாயுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரு வயதும் 9 மாதங்களும் நிரம்பிய குழந்தையொன்றின் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய குழந்தையின் சடலம் இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்