கோப் குழுவில் தவறான சாட்சியளிப்பவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்: சுனில்

கோப் குழுவில் தவறான சாட்சியளிப்பவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும்: சுனில்

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2017 | 7:49 pm

கோப் குழுவை தவறாக வழிநடத்தும் வகையில் சாட்சியளிப்பவருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

கோப் குழு மற்றும் பாராளுமன்றத்தின் நிலையியற்குழுக்களுக்கு முன்பாக அதிகாரியொருவர் சாட்சியளிக்கும் போது, சத்தியப்பிரமாணமாகவே சாட்சி வழங்குகின்றனர். ஆகவே, மத்திய வங்கியின் விசாரணையின் போது அதிகாரியொருவர் அல்லது கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வேறு நிறுவனம் ஒன்றின் நபரொருவர் தவறான தகவல்களை வழங்கியிருந்தால், அது பாராளுமன்றத்தின் கோப் குழுவிற்கு வழங்கிய தவறான கருத்தாகும். எனவே, அதற்கு எதிராக சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என சுனில் ஹந்துன்நெத்தி விளக்கமளித்தார்.

”முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள நிலையில்,
அந்த அறிக்கையில் தவறான தகவல்களை வழங்கியவர்களின் பெயர்களையும் குறிப்பிட வேண்டும். அதன்படி, அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும்,” எனவும் அவர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்