ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கட்சி பேதமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கொள்கை உள்ளது

ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கட்சி பேதமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கொள்கை உள்ளது

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2017 | 7:34 pm

ஊழல் மோசடியில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கட்சி பேதமின்றி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பதுள்ளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

[quote]கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் மூலம் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளமை உறுதியானது. அரசாங்கத்தின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. சர்வதேசமும் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கின்றது. அபிவிருத்திக்கு உதவிகளை வழங்க அவர்கள் அதனை எதிர்பார்க்கிறார்கள். பாராளுமன்றத்தில் நாம் அந்த வெற்றியைப் பெற்றுக் கொண்ட அதேவேளை, நான் ஐ.நா-விற்கு சென்று செயலாளர் நாயகம் மற்றும் மனித உரிமை ஆணையாளர், அரச தலைவர்களை சந்தித்து சர்வதேசத்தின் ஆதரவை வென்றெடுத்தேன். அதனால் சர்வதேசத்தின் நம்பிக்கையை நாம் பெற்றுக்கொண்டுள்ளோம். எனவே, நாட்டில் அபிவிருத்திகள் ஏற்படும்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்