இரத்தினபுரி ,நுவரெலியா, களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இரத்தினபுரி ,நுவரெலியா, களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

27 Sep, 2017 | 8:39 am

நாட்டில் தொடர்ந்தும் மழை பெய்யுமாயின், மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரத்தினபுரி ,நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிலையம் அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, இரத்தினபுரி, குருவிட்ட, பெல்மடுல்ல பிரதேச செயலக பிரிவுகளிலும், களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவுகளிலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் லபுக்கல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இடர்முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்வதால், நிலச்சரிவு, மற்றும் கற்பாறைகள் சரிந்து வீழ்தல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இடர்முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை இன்றைய தினமும், நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்