அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கை குறைந்த விலையில் சதொச ஊடாக விற்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கை குறைந்த விலையில் சதொச ஊடாக விற்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கை குறைந்த விலையில் சதொச ஊடாக விற்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2017 | 10:44 pm

5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பிரிவுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்பில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தெங்கு உற்பத்தி சபையூடாக நேரடியாக மக்களுக்கு குறைந்த விலைவில் தேங்காயை விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரிசி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு என்பவற்றை தற்போதைய விலையை விட குறைந்த விலைக்கு சதொச ஊடாக நாளை முதல் நுகர்வோருக்கு வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், அரிசியின் விலையை நாளை முதல் குறைப்பதற்கும், விலைப்பட்டியலை உடனடியாக அறிவிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்