அஞ்சலியின் தங்கை ஆரத்யா சினிமாவில் அறிமுகமாகிறார்

அஞ்சலியின் தங்கை ஆரத்யா சினிமாவில் அறிமுகமாகிறார்

அஞ்சலியின் தங்கை ஆரத்யா சினிமாவில் அறிமுகமாகிறார்

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2017 | 4:10 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அஞ்சலியின் தங்கை ஆரத்யா சினிமாவில் நடிக்கவுள்ளார்.

ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் அஞ்சலி. ‘அங்காடித்தெரு’ அவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து நடித்து வரும் அஞ்சலி திரை உலகில் தனி இடம் பிடித்திருக்கிறார்.

‘பலூன்’ படத்தில் நடித்துள்ள அவர் ‘பேரன்பு’, ‘காளி’ படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அஞ்சலியின் தங்கை ஆரத்யாவும் நடிகை ஆகிறார்.

விரைவில் தெலுங்குப் படம் ஒன்றில் அறிமுகமாகவுள்ளார். தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்