தேவைப்படுமாயின் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கைகோர்க்கத் தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு

தேவைப்படுமாயின் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கைகோர்க்கத் தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு

தேவைப்படுமாயின் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கைகோர்க்கத் தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Sep, 2017 | 4:35 pm

தேர்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் நிலை உருவானால், சினிமாவில் நடிப்பதை நிறுத்தப் போவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தாம் அரசியலில் ஈடுபடும் தீர்மானத்தை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கவில்லை எனவும் நிதானமாக யோசித்தே எடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே கமல்ஹாசன் இதனைக் கூறியுள்ளார்.

நிர்வாக ரீதியாகத் தேவைப்படுமாயின் பாரதிய ஜனதாக் கட்சியுடன் கைகோர்க்கத் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரதிய ஜனதாக் கட்சியின் வலதுசாரி கொள்கைகள் தமக்கு அதிருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ள கமல்ஹாசன், குறைந்தபட்ச செயற்திட்டம் உருவானால் அக்கட்சியுடன் தொடர்பு வைத்துக்கொள்வதில் தயக்கமில்லை என்றும் கூறியுள்ளார்.

கட்சி, கொடி மற்றும் சின்னம் ஆகியவற்றை இறுதி செய்யும் பணியில் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் கட்சியை ஆரம்பிக்க அவர் எதிர்பார்த்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்