அணியின் வெற்றிக்காக எந்த வரிசையில் வேண்டுமானாலும் விளையாடுவேன் – ஹர்திக் பாண்டியா

அணியின் வெற்றிக்காக எந்த வரிசையில் வேண்டுமானாலும் விளையாடுவேன் – ஹர்திக் பாண்டியா

அணியின் வெற்றிக்காக எந்த வரிசையில் வேண்டுமானாலும் விளையாடுவேன் – ஹர்திக் பாண்டியா

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2017 | 11:16 am

அணியின் வெற்றிக்காக எந்த வரிசையில் வேண்டுமானாலும் களமிறங்கி விளையாடுவேன் என இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கிடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் நேற்று நடைபெற்றது.

நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன், முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

போட்டியில், அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 293 ஓட்டங்களை பெற்றது.

போட்டியில் பதிலளித்தாடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 294 ஓட்டங்களை பெற்று தொடரை கைப்பற்றியது.

இதேவேளை, ரோஹித் சர்மா, ரஹானே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா மூன்றிற்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்