43 ஆவது தேசிய விளையாட்டு விழா: கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு வடமாகாணம் தகுதி

43 ஆவது தேசிய விளையாட்டு விழா: கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு வடமாகாணம் தகுதி

43 ஆவது தேசிய விளையாட்டு விழா: கால்பந்தாட்ட இறுதிப் போட்டிக்கு வடமாகாணம் தகுதி

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2017 | 3:36 pm

43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான கால்பந்தாட்டப் போட்டியில் வட மாகாணம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

43 ஆவது தேசிய விளையாட்டு விழா மாத்தறையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதற்கான குழுநிலைப் போட்டிகளில், ஆடவருக்கான கால்பந்தாட்டப் போட்டிகள் மாத்தறை உயன்வத்த மைதானத்தில் நடைபெற்றது.

இதன் அரையிறுதிப் போட்டியில் வட மத்திய மாகாண அணி , வட மாகாண அணியை சந்தித்தது.

போட்டியின் இரண்டு பாதிகளில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

இதனால் பெனால்ட்டி முறையை வழங்க நடுவர்கள் தீர்மானித்தனர்.

பெனால்ட்டி முறையில் திறமையாக விளையாடிய வட மாகாண வீரர்கள் 3 கோல்களைப் போட்டனர்.

வட மத்திய மாகாண அணி வீரர்களால் 02 கோல்களை மாத்திரமே போட முடிந்தது.

போட்டியில் மூன்றுக்கு இரண்டு என வெற்றியீட்டிய வட மாகாண அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்