ரவூப் ஹக்கீமின் தாயார் ஹாஜரா ரவூப் காலமானார்

ரவூப் ஹக்கீமின் தாயார் ஹாஜரா ரவூப் காலமானார்

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2017 | 7:17 pm

நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயார் ஹாஜரா ரவூப் தனது 89 ஆவது வயதில் இன்று காலமானார்.

ஹாஜரா ரவூப் 1928 ஆம் ஆண்டு ஹப்புகஸ்தலாவையில் பிறந்தார்.

ஆரம்ப காலம் முதல் மார்க்கக் கல்வியில் அதிக ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்டார்.

அன்னாரின் ஜனாஸா கொழும்பு 7-இல் அமைந்துள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் அன்னாரின் ஜனாஸாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஹாஜரா ரவூபின் ஜனாஸா ஜாவத்தை ஜூம்மா பள்ளிவாசலில் நாளை காலை 10 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

 

 

(பட உதவி: சமூக வலைத்தளம்) 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்