மட்டக்குளிக்கான பிரதான வீதி ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து முழுமையாக மூடப்படுகிறது

மட்டக்குளிக்கான பிரதான வீதி ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து முழுமையாக மூடப்படுகிறது

மட்டக்குளிக்கான பிரதான வீதி ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து முழுமையாக மூடப்படுகிறது

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2017 | 3:08 pm

கொழும்பு – 15, மட்டக்குளிக்கான பிரதான வீதி ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இன்று முதல் முழுமையாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குடிநீர் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பு – ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து அளுத்மாவத்தை வரையான வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அதற்கமைய, இன்று இரவு 9 மணி தொடக்கம் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை இந்த வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியைப் பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்கமைய, புறக்கோட்டையிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் கொச்சிக்கடை ஊடாக பயணித்து, ஹெட்டியாவத்தை சந்தியூடாக வலது புறமாகத் திரும்பி ப்ளூமெண்டல் சந்தியை சென்றடைந்து, அங்கிருந்து இடது புறமாக மாதம்பிட்டி வீதியூடாக சென். ஜேம்ஸ் சந்திக்கு சென்று அளுத்மாவத்தை வீதியை சென்றடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளியிலிருந்து புறக்கோட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் மாதம்பிட்டிய சந்தியூடாக சென் ஜேம்ஸ் வீிதி, போதி சந்தி ஊடாக பயணித்து ஜோர்ச் ஆர். டி சில்வா வீதிக்குள் பிரவேசித்து ஹெட்டியாவத்தையூடாக புறக்கோட்டையை சென்றடைய முடியும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்