திருப்பெருந்துறையில் குப்பை கொட்டிய ஊழியர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

திருப்பெருந்துறையில் குப்பை கொட்டிய ஊழியர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2017 | 8:38 pm

திருப்பெருந்துறையில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மாநகர சபையின் வௌிக்கள ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகர சபை முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத் தலைமையகம் வரை சென்றதுடன், ஊழியர்கள் அங்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களால் பொலிஸாரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு நபரும் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்து, காந்தி பூங்கா முன்றலில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பக்கசார்பின்றி விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்