தொழிலாளர்கள் இருவர் கைது: ஆக்கரதன்ன தோட்ட மக்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தொழிலாளர்கள் இருவர் கைது: ஆக்கரதன்ன தோட்ட மக்கள் பணிப்பகிஷ்கரிப்பு

தொழிலாளர்கள் இருவர் கைது: ஆக்கரதன்ன தோட்ட மக்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2017 | 10:33 pm

பசறை – ஆக்கரதன்ன தோட்ட மக்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

பொய்யான குற்றச்சாட்டின் கீழ் தொழிலாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆக்கரதன்ன தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இன்று தோட்ட மக்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் குற்றச்சாட்டு தொடர்பில் பசறை பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

திருட்டுச்சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய ஆக்கரதன்ன தோட்டத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர்களை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும், இன்று அவர்களுக்கான பிணை வழங்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்