தனிக்கட்சி தொடங்குகிறார் கமல்ஹாசன்

தனிக்கட்சி தொடங்குகிறார் கமல்ஹாசன்

தனிக்கட்சி தொடங்குகிறார் கமல்ஹாசன்

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2017 | 5:37 pm

நடிகர் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கப் போவதாகவும், 100 நாட்களில் தேர்தல் வந்தால் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கம் ஊடாக அதிரடியான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.

ஆளும் கட்சியான அதிமுக தொடர்பில் கடுமையான விமர்சனங்களை அவர் வௌிப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் நேற்று (21) சென்னையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கமலுடன் பல விடயங்கள் குறித்து விவாதித்ததாகக் கூறியுள்ள கெஜ்ரிவால், ஊழலுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கமல் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பையடுத்து, தாம் எந்தக் கட்சியுடனும் இணைந்து செயற்பட விரும்பவில்லை என்றும் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும் கமல் கூறியுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்துக்கூறிய கமல், இது கட்டாயத் திருமணம் என்றும், அதில் இருந்து விடுபட மக்கள் விரும்புவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்