கொழும்பு – ப்ரேப்ரூக் பகுதியில் இருந்து 3 கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன

கொழும்பு – ப்ரேப்ரூக் பகுதியில் இருந்து 3 கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2017 | 9:10 pm

கொழும்பு – கொம்பனி வீதி, ப்ரேப்ரூக் பகுதிக்கு அண்மையிலுள்ள வாகனத் தரிப்பிடத்திலிருந்து 3 கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ப்ரேப்ரூக் பகுதியில் உள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனத் தரிப்பிடத்திலிருந்தே இந்த கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாகனத்தரிப்பிடத்தின் மூடப்பட்டிருந்த நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றின் கீழிருந்து இந்த கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வாகனத் தரிப்பிடத்திலிருந்த தொழில்நுட்ப அதிகாரியொருவர் வழங்கிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு பொலிஸாரினால் தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, கைக்குண்டுளை செயலிழக்கச் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என்பதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்